(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாங்கள் கொழும்பில் முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர் என்ற வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொழும்பில் ஒற்றுமையாக இருகிறோம், நாங்கள் இவர்கள் வடக்கில் இருந்து வந்தவர்களா கிழக்கில் இருந்து வந்தவர்களா அல்லது கிளிநொச்சியா புதுகுடியிருப்பா என்று பார்ப்பது இல்லை. எவர் வந்தாலும் விரும்பிய இடத்தில் தொழில் செய்யலாம். எந்த இடத்திலும் கோவில்களை நிர்மாணிக்கலாம். வேல் ஊர்வலம் செல்லலாம் என தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுருவின் நல்லடக்க செயற்பாட்டை முன்னேடுப்போம் என தெரிவித்தார்.
இங்கு பௌத்த மதம் வந்ததுக்கு பின்னர்தான் இஸ்லாம்,கிறிஸ்தவம், இந்து மதங்கள் வந்துள்ளது. இந்த முழு பூமியும் பௌத்த பூமியாகும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.