சதுரங்க ஆட்டம் நிறைவுக்கு – சஜித்திற்கு வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இன்று(23) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தனியாக சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் சாதகமான இணக்கப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினமும் இருவரும் மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடுவதாக நேற்று(22) இணக்கம் கண்டிருந்த நிலையில் இவ்வாறு செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், குறித்த செய்திகளில் எவ்வித உண்மைப்பாடும் இல்லை நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.