(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நுகர்வோர் சேவை அதிகார சபை இதுவரையில் அதனை செயற்படுத்தவில்லை.
இவ்வாறு விலை குறைப்பதாக வெளியான செய்திகள் காரணமாக எரிவாயு சிலிண்டர் தொகையை வர்த்தகர்கள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தங்களுக்கு எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.