(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ஹூசைன் மும்தாஸ் இம்முறை இடம்பெற்ற ´நீர்காகம் கூட்டுப்படைப் பயிற்சி´ அப்பியாசத்தை பார்வை இடுவதற்காக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருத்த நிலையில், இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையத்தில் வைத்து அண்மையில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இம்முறை சாத்தியமான முறையில் இடம்பெற்ற கூட்டுப்படை பயிற்சி தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் 1960 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பயிற்சி திட்டங்கள் பரிமாறிக் கொண்ட விடயங்கள் தொடர்பாக நினைவு கூறப்பட்டதோடு, குறித்த சந்திப்பை நினைவுபடுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.