ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2015 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இது கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.