
நயன் – விக்னேஷ் சிவன் திருமணம் கப்பலில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து திருமணத்துக்கு அவர் தயாராவதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுடைய திருமணத்தை வெளிநாட்டில் வைத்து நடத்த திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு குரூஸ் ஷிப்பில் வைத்து இவர்களது திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.