கோட்டாபயவுக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கையராக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு இந்தஉத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்ராகுப்த தெவ்நுவர மற்றும் காமினி வெயாங்கொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்,
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் அரச நிர்வாக உள்விவகார அமைச்சர்
வஜிர அபேவர்தன, குறித்த அமைச்சின் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த
ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பதில்
பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க குடியூரிமையை இரத்துச் செய்ததாக குறிப்பிட்டு கடவுச் சீட்டையும் தேசிய அடையாள அட்டையும் பெற்றுக்கொண்டுள்ளதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.