அனைத்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசம்; பொதுபல சேனாவின் புதிய கட்சி உதயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசமாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது.

பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ‘உரிமைக்கு உரிமை” என்ற கட்சியையும் பொதுபல சேனா நேற்று ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவனொலிபாதமலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீபாத என்ற பெயர் வைக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.