4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(21) பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி முன்னிலையில்  ரணில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

இக்குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ரணில் பிரதமராக பதவியேற்கும் 04 வது சந்தர்ப்பம் இதுவென்பதும் இங்கு குறிப்பி்டத்தக்கது.

(riz)