சஜித்தின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு இதுவா? [RESULTS SHEET]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் சஜித் பிரேமதாஸ கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ் பிரதி போன்ற ஒன்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அண்மையில் பரிந்துரை செய்யப்பட்டார்.

இந் நிலையிலேயே இந்த தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ் பிரதி சமூக வலத்தளத்தில் பரப்பப்படுகிறது.

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும், ஏமா பிரேமதாஸவிற்கும் புதல்வராக 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சஜித் பிரேமதாஸ பிறந்தார்.

ஆரம்ப கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மில் ஹில் பாடசாலைகளில் தொடர்ந்த சஜித் பிரேமதாஸ ,தனது மேல்நிலை கல்வியை லண்டனில் உள்ள மேரிலன்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.