இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று(07) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.