அலி சப்ரி – வைத்தியர் ஷாபி பரபரப்பு விவகாரம் புரியாத மடமைகளுக்கு சப்ரியின் திறந்த பதிலடி [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான மொஹமட் அலி சப்ரி இனால் குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனின் குற்றச்சாட்டு போலியான நாடகமெனவும் அதனை நிர்மாணித்தது ‘மொட்டுக்’ கட்சி என தான் ஏற்றுக் கொள்வதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட முகநூல் பதிவின் கருத்துப் பதிவானது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியமை யாவரும் அறிந்ததே.

அது தொடர்பிலான திரைக்காட்சிகள் (Screenshots) மூன்றின் முதலாவது திரைக்காட்சியில் (Screenshot) அலி சப்ரியின் பதிவும் (Post) இரண்டாவது மற்றும் மூன்றாவது திரைக்காட்சிகளில் (Screenshots) கருத்துப் பதிவுகள் கொண்ட தர்க்கங்களையும் சமூக ஊடகங்கள் மேற்கோள்காட்டி முன்வைத்திருந்தன.

சட்டத்தரணி அலி சப்ரி இனது முகநூல் பதிவு

Image

“அனைத்து தீவிரவாதிகள் மற்றும் இனவாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பன்முகத்தன்மை பலப்படுத்தப்பட வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்!”

குறித்த பதிவுக்கு அதில அதாஉத (Athila Athauda) எனும் தனிநபர் ஆங்கில மொழியில் கருத்தொன்றினை பதிவிட்டிருந்தார். குறித்த கருத்து உரையாடலானது;

Image

அதில அதாஉத (Athila Athauda):-
“When you say this sir, I don’t know what to say”
( சார், நீங்கள் இவ்வாறு கூறும் போது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.)

மொஹமட் அலி சப்ரி (Mohamed Ali Sabry):-
“Athila Athauda , this is an ongoing battle Every camp has its fair share of extremists”
(அதில அதாஉத, இது இப்போதும் இடம்பெறுகின்ற போராட்டம். ஒவ்வொரு முகாமிலும் கணிசமான எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் உள்ளனர்.)

தினுஷ்க பெரேரா (Dinushka Perera) :-
“Mohamed Ali Sabry sir compare to the other political parties පොහොට්ටුව party full of extremists .they created the Dr Shafi s drama”
(மொஹமட் அலி சப்ரி சார், ஏனைய முகாம்களுடன் ஒப்பிடுகையில் மொட்டுக் கட்சியில் தீவிரவாதிகள் அதிகம். அவர்கள் தான் வைத்தியர் ஷாபி தொடர்பிலான நாடகத்தினை நிர்மாணித்தது..)

மொஹமட் அலி சப்ரி (Mohamed Ali Sabry):-
“Dinushka Perera yes I agree. So you need to initiate an internal dialogue , which is been done. So, secular members leaving is no solution”
( தினுஷ்க பெரேரா ஆம் நான் உடன்படுகிறேன். அப்படி என்றால் நாம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். ஏலவே அது முடிந்து விட்டது. அவ்வாறிருக்க மத சார்பற்றவர்கள் அமைப்பை விட்டு வெளியேறுவது தீர்வு அல்ல.)

இதில், அலி சப்ரி இனால் தினுஷ்கவின் மொட்டுக் கருத்திற்கு அவர் உடன்பட்டுள்ளமை தெளிவாக புரிகின்றது. அது தொடர்பில் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ளக கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இதுவே டுவிட்டர் வலைதளத்தில் திரிவுபடுத்தப்பட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரினால் பதிவேற்றப்பட்டிருந்தது.

சட்டத்தரணி அலி சப்ரி, ஒக்டோபர் மாதம் 04ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதல் முஸ்லிம் சட்டத்தரணி என்ற நிலையில், அவர் மீது மக்கள் மற்றும் ஊடகங்கள் கவனம் திரும்பியமை யாவரும் அறிந்ததே.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் சமூகம் ஆகியவை இரண்டு முனைகள் என சுட்டிக்காட்டி முஸ்லிம் வாக்குகளை ஒரு முனைக்கு தள்ளி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அலி சப்ரி போன்றதொரு புத்திசாதூர்யமான சரளமாக சிங்களம் பேசக்கூடிய முஸ்லிம் தொழிலாளி ஒருவர் கோட்டாபயவின் முகாமில் இருப்பது அரசியல் ரீதியாக எதிர்கட்சியினருக்கு சவால்மிக்க காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இருக்க குறித்த விரிவுபடுத்தப்பட்ட பதிவானது எதிரமைப்பு அரசியல் கட்சிகளுக்கு தீனியாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

மேற்குறித்த விரிவுபடுத்தப்பட்ட உரையாடலுக்கு பதிலடியாக சட்டத்தரணி அலி சப்ரி மேலுமொரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

குறித்த பதிவு