கூரிய ஆயுதத்தினால் தாக்கி தம்பதியினர் கொலை

கூரிய ஆயுதத்தினால் தாக்கி கணவன், மனைவி ஆகிய இருவர்களும் அம்பலாங்கொடை பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் தமது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 63 வயதுடைய கணவரும் 62 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.