சஜித் முன்னணியில்; கடும் கோபத்தில் கோட்டாபய

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கையில் சஜித் முன்னணி வகிப்பது தெளிவாகியுள்ளதாகவும், இதற்கு சமூக வலைத்தள பிரச்சார குழு முழுமையான பொறுப்பு கூற வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரச்சார குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கை போதுமானதாக இல்லையென பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கடும் கோபமடைந்துள்ளார்.

எனினும் பொதுஜன முன்னணியின் சமூக வலைத்தள பிரச்சார குழு அது குறித்து கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த இளைஞர்களின் பக்கங்கள் அனைத்தும் சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட பிரச்சார குழு, சமூக வலைத்தள பிரச்சார குழு மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.