இலங்கையில் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், அதிகளவான மக்கள் இலங்கை தேர்தலில் வாக்களித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய அரசாங்கம், சிறந்த ஆட்சி மனித உரிமைகள் காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல்கள் ஆணையாளரின் பங்கு சிறப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)