(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தமிழ் மக்களுக்கான அனுதாபத்தையும், விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைவையும் எந்த ஒரு தரப்பும் பிழையான கருதுகோள் கொண்டு பார்க்கக்கூடாது என டட்டுக் அயூப்கான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு உதவித்தலைவர் டட்டுக் அயூப்கான் நேற்று கோலாலம்பூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,தாமும் இலங்கை தமிழர் மீது அனுதாபம் கொண்டிருக்கிறேன். எனினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கமாட்டேன்.
மலேசியாவில் உள்ளவர்கள் இலங்கையின் தமிழர்கள் மீது அனுதாபம் கொள்வது தவறு அல்ல. எனினும் பயங்கரவாத குழுவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பது தவறு.
இதேவேளை விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட பெருமளவு நிதி பரிமாற்றங்கள் மலேசியாவிலிருந்து செய்துக்கொள்ளப்பட்டமையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.