(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிமின் வீடியோக்களைப் பார்த்து அவ் அமைப்புக்கு ஆதரவை வழங்கிய 127 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக, சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தால் இந்த அறிக்கையை வெளியிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனோர் ஷாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
சஹ்ரான் ஹாசிமின் வீடியோக்களைப் பார்த்து தாம் ஈர்க்கப்பட்டதை ஒப்புக்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தால் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், உத்தரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 17 பேர், மகாராஷ்ராவில் 14 பேர் மற்றும் கர்நாடகாவில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.