(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இவ்வருட இறுதிக்குள் அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.
மேலும், அரச மற்றும் தனியார் துறைக்கு ஊழியர்களை உள்ளீர்க்கும் போது குறிப்பிட்ட ஒரு வீதத்தை அங்கவீனமுற்றவர்களுக்கு ஒதுக்குவது குறித்த சட்டத்தையும் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.