கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வாரமளவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(15) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.