அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல்வாதிகளின் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோசடி மற்றும் ஊழலைக் குறைப்பதன் மூலம் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து கொள்கை பிரகடனத்தை வௌியிடும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.