அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்
இம்முடிவை அடுத்து கட்சியின் பதில் செயலாளராக டாக்டர் சாஜஹான் நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார்.
அதே நேரம் அ.இ.ம.காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச் சேர்ந்ந்த நவவி நியமிக்கப்படதற்கு இன்று காலை இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்திலும் சூரா கவுன்சில் கூட்டத்திலும் ஏகமனதாக அங்கிகாரம் வழங்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில்; இடம்பெற்ற மாநாட்டில் அ.இ.ம.கா சார்பாக தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களும் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்
அம்பாறை மாவட்டத்தின் அனைத்து கட்சி முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவென பிரதி அமைச்சர் அமீர் அலியை நியமிப்பதெனவும் திகாமடுல்லவின் பாராளுமன்ற உறுப்பினர் கனவு விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் இம்மாவட்டத்தின் தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றம் செல்ல குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது அறிவிக்கப்பட்டது
வை.எல்.எஸ். ஹமீட் தேசியப்பட்டியல் விவகாரத்தில் தலைமைத்துவத்திற்கு எதிராக அறிக்கை விட்டதுடன் தலைவரை விலக்கப்போவதாக அறிக்கை விட்டமை குறிப்பிடத்தக்கது