(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள எந்தவொரு இனத்தையும், மதத்தையும் தனிமைப்படுத்த அனுமதியளிக்க மாட்டோம் எனவும் சகல இனங்களும், மதங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலை நாட்டில் உருவாக்குவோமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ‘தேசிய ஐக்கியம்’ எனும் கொள்கை வெளியிடும் பொதுக் கூட்டம் நேற்று(20) நீர்கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.