சர்வதேச கடல் மாநாடு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாது­காப்பு அமைச்சின் மேற்­பார்­வையின் கீழ் இலங்கை கடற்­படை தொடர்ந்து பத்­தா­வது தட­வை­யா­கவும் ஏற்­பாடு செய்­துள்ள காலி கலந்­து­ரை­யாடல் 2019 சர்­வ­தேச கடல் மாநாடு இன்று(21) கொழும்பு காலி முகத்­திடல் ஹோட்­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

55 நாடு­களின் 12 சர்­வ­தேச அமைப்­பு­களின் மற்றும் 03 பாது­காப்பு துறை பொருட்கள் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களின் உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் கடல் பாது­காப்பு நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் ‘ஒரு புதிய சிந்­த­னை­யுடன் தசாப்­தத்தின் மீளாய்வு’ என்ற கருப்­பொ­ருளின் கீழ் இன்றும் நாளையும் இம்­மா­நாடு நடை­பெ­ற­வுள்­ளது.