உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.