(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அரசியல் பயணம் தொடர்பில் கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கையில், “ஓய்வெடுக்கும் சுகத்தை விட செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்புகிறேன்”என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்ற ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பிய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
විවේක සුවයට වඩා
සක්රීය දේශපාලනයට මා ඇලුම් කරමි. pic.twitter.com/Yb6wxX8II0— Maithripala Sirisena (@MaithripalaS) October 28, 2019