ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- முன்னாள் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா
- முன்னணியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜோன் செனவிரத்ன
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க
- உப தலைவர் மஹிந்த அமரவீர
- பேராசிரியர் சரத் அமுனுகம
- ஏ.எச்.எம்.பௌசி
- எஸ்.பீ.திஸாநாயக்க
- மஹிந்த சமரசிங்க
- டிலான் பெரேரா
- விஜித் விஜயமுனி சொய்சா
- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
- ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களினுள் நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, டப்ல்யூ.டீ.ஜே.செனவிரத்ன மற்றும் பேராசிரியர் சரத் அமுனுகம ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இவர்கள் தற்போதே அமைச்சர் பதவிகளை பெற்று கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சிலருக்கு அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது
(riz)