கலிபோர்னியா காட்டுத்தீ தொடர்ந்தும் நீடிக்கின்ற நிலைமை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்ந்தும் நீடிக்கின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த காட்டு தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காக விமானங்களும் ஈடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் இருந்து இதுவரை 50,000 இற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.