(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அருகில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தீ பரவிய அரண்மனையான ஷூரி அரண்மனை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.