இலங்கைக்கு 164 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல்

இலங்கைக்கு 164 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பில் குறித்த நிதியம் மேற்கொண்ட ஆறாவது மதிப்பீட்டிற்கு பிறகே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.