(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த பிகில், படம் வெளியானது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் பிகில் தற்போது ஜோர்டான் நாட்டில் இந்த மாதம் ரிலீஸாகவுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 15, 16 திகதிகளில் காலை 11, மதியம் 3.30, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் திரையிடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.