(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தீர்மானமிக்க அறிவிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி உறுப்பினர் கே.டீ.லால்காந்த, முதலாம் வாக்கினை அனுரகுமார திசாநாயக்கவுக்கும், இரண்டாம் விருப்பத்தை எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கலாம் என குறிப்பிட்டார்.
இந்தக் கருத்து தேர்தல் களத்தில் அதிகம் பேசப்பட்டதுடன், மக்கள் மத்தியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு மிகவும் பின்னடைவான விடயமாக கருதப்படுகிறது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க நேற்று நடத்திய மாநாடு, தேர்தல் களத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு வழங்கிய ஆதரவை விடவும் நேற்றைய சந்திரிக்காவில் மாநாட்டில் அதிகளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் கோட்டாபய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய நெருக்கடி நிலைமை தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்ஸ மேடைகளில் பேசும்போது அதிகமாக தடுமாறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.