இந்த அரசிடம் உரிய பொருளாதார திட்டங்கள் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் அபிவிருத்திக்கான உரிய வேலைத்திட்டத்தை தாம் கொண்டிருப்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“.. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள், தற்போதைய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் தமது ஆட்சியில் மீள ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்திடம் உரிய பொருளாதார திட்டங்கள் இல்லை. நாட்டின் தேசிய பெருந்தோட்டக் கைத்தொழிலை அரசாங்கம் முற்றாக புறக்கணித்து செயற்படுகிறது.

பெருந்தோட்ட கைத்தொழில் துறை சார்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும்.
அதற்கான உத்தரவாதம் தம்மால் வழங்கப்படுகிறது..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.