அனைத்து விவசாய கடன்களும் இரத்து செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்களது ஆட்சியின் கீழ் அனைத்து விவசாய கடன்களும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை – தம்புளுகம பகுதியில் நேற்று(08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“.. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது ஆட்சியின் கீழ் அனைத்து விவசாய கடன்களும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேபோல் விவசாய காப்புறுதி மற்றும் விவசாய ஓய்வூதியம் என்பன மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், விவசாயிகளை வாழவைப்பதற்கான அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் குறைந்த செலவில் கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம்..” எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.