ஹபிழ் ஸலபி SLTJ ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளராகவும், குருநாகல் மாவட்ட முன்னால் தலைவராகவும் செயல்பட்ட ஹபிழ் ஸலபி என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப் படுகின்றார்.

இவர் மீது சுமத்தப்பட்ட பொருளாதார குற்றச்சாட்டு, மற்றும் தலைமைக்கு தெரியாமல் 30 மாதங்களாக (இரண்டரை வருடங்களாக) அரபு நாட்டு தனவந்தரிடமிருந்து சம்பளம் பெற்றுக் கொண்டமை, பெற்ற சம்பளத்திற்காக ஜமாத்தின் பணிகளை செயல்பாட்டு அறிக்கையாக குறித்த தனவந்தருக்கு அனுப்பி வைத்தமை போன்றவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு வருட காலம் இவரை ஜமாத்திலிருந்து நீக்கி வைத்திருந்த போது, ஜமாத்தின் பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டமை, ஜமாத்தின் அங்கத்தவர் என்று காட்டிக் கொண்டு ஜமாத்தினை கூறு போடும் விதமாக செயல்பட்டமை போன்ற காரணங்களுக்காக இவர் ஜமாத்தின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் என்ற தகைமை உள்ளிட்ட அனைத்திலிருந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப் படுகின்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இவருடைய விசாரனை தொடர்பான வீடியோ பதிவுகள் தேவையேற்படின் பகிரங்கப்படுத்தப்படும் என்பதையும் தலைமை நிர்வாகம் தெளிவாக அறிவித்துக் கொள்கின்றது.

(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்-SLTJ)