(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை தினம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் இடம்பெறலாம் என அரசியல் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுதந்திர கட்சியை காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சந்திரிக்கா நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்தப் பின்னணிகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் தீர்மானமிக்க முடிவு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.