எம்மாலேயே நாட்டில் தேசிய ஒற்றுமை நிலவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் நேற்று(13) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமது ஆட்சியில் ஊழல், மோசடி, வீண்விரயம் அற்ற ஆட்சி ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.