
நள்ளிரவு முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.