இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைத்ரி 2வது திருமண ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் தனது 2வது திருமண ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது திருமணம் பற்றி அவ்வப்போது கேட்கிறார்கள். என் திருமணம் வழக்கமான சடங்காக இருக்காது. ஒரு கடற்கரையில் எனது திருமணத்தை நடத்த விரும்புகிறேன். திருமணம் முடிந்தபின் கடற்கரை பகுதியில் நடனம் ஆடி களிக்க வேண்டும். திருமண நாளின்போது எனது அம்மாவின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்க எண்ணுகிறேன்.

அவர் திருமணம் செய்தபோது மேக்அப் எதுவும் அணியவில்லை. இயற்கையான தோற்றத்தில் புத்துணர்ச்சியும், அப்பாவித்தனமும் நிறைந்தவராக இருந்தார். பாரம்பரிய நகைகள், பாரம்பரிய சேலை அணிந்திருந்தார் அந்த எளிமையான தோற்றத்தைத்தான் நானும் விரும்புகிறேன்.