முன்னைய அரசின் 7000 நியமனங்கள் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய காபந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, வங்கிகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களில், என்டர்பிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சலுகைக் கடன்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.