Salam Air இடமிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவை

Salam Air இடமிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓமானின் சலாம் விமான நிறுவனமானது, இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான விமான சேவையையே சலாம் எயார் (Salam Air) நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, திங்கள், புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்கு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.