ரணில் – கரு – சஜித் தீர்மானமிக்க சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று(26) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகின்றது.