சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஹீரோ படமும் கிறிஸ்மஸ் விடுமுறையையொட்டி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.கே.18 படக்குழுவினருடன் கவின்