முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளது.

சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.