கர்ப்பம் தரித்து 27 வாரங்களில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்து ஆரோக் கிய நிலையை அடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற் றுள்ளது.
கிழக்கு யோர்க் ஷியரில் ஹல் எனும் இடத்தைச் சேர்ந்த ஸ்டெபனி (34 வயது) மற்றும் ஜேம்ஸ் (38 வயது) தம்பதிக்கு பிறந்த மோலி பெரின் என பெயர் சூட்டப்பட்ட குழந்தையே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அந்தக் குழந்தை பிறந்த போது அதன் நிறை ஒரு இறாத்தல் ஒரு அவுன்ஸ் மட்டுமேயாகும். அச்சமயம் அந்தக் குழந்தையின் கை அதனது தந்தையின் திருமண மோதிரத்தினூடாக நுழையக் கூடிய அளவில் மிகவும் சிறிதாக இருந்தது.
இதன்போது மருத்துவர்கள் அந்தக் குழந்தை 3 வாரங்களுக்கு மேல் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவர்களது கூற்றைப் பொய்யாக்கும் வகையில் ஆரோக்கிய நிலையை அடைந்த அந் தக் குழந்தை, பிறந்து 17 வாரங்களாகின்ற நிலை யில் அதனது பெற்றோரி டம் ஒப்படைக்கப்படவுள் ளது.