மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைப்பு

மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

103 கடைத் தொகுதிகளைக் கொண்ட குறித்த மிதக்கும் சந்தை, 312 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

பராமரிப்பு இன்றி சந்தை தொகுதி காணப்பட்ட நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.