சம்பிக்கவை தொடர்ந்து கைதாகும் UNP உறுப்பினர்கள் தொடர்பில் அகில வெளிச்சம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிகவும் விரைவில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கைதாகும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக சட்டம் துஷ்பிரயோகமாவதை தெளிவாக காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

2015 இல் நல்லாட்சி அரசினால் சட்டம் முறையாக கையாளப்பட்டதே தவிர அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருந்த அவர், சம்பிக்க ரணவக்கவின் கைது சட்டவிரோதமானது என்றும், அதனைத் தொடர்ந்து ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் நாட்களில் கைதாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.