(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில், முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இப்படி அடுத்தடுத்து 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.