தேசிய அரசிடமிருந்து புதிய அமைச்சரவை விபரம்

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் சற்று முன்னர் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளன.

அதன் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் அமைச்சு மற்றும் அமைச்சுக்கள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கப்படும் என்று நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.

ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில்.

பட்டியல் விபரங்கள் வருவன;

  1. நிதியமைச்சர் – ரவி கருணாநாயக்க
  2. பொருளாதார திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அமைச்சர்- கபீர் ஹாசிம்
  3. நகர அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சு – சம்பிக்க ரணவக்க
  4. பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் – திலக் மாரப்பன
  5. நெடுஞ்சாலைகள் அமைச்சர் – லக்ஷ்மண் கிரியெல்ல
  6. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் – கயந்த கருணாதிலக்க
  7. மின்சக்தி அமைச்சர் – ஜோன் அமரதுங்க
  8. ஊடகத்துறை அமைச்சர் – சாகல ரத்நாயக்க
  9. தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சர் – பழனி திகாம்பரம்
  10. சுதேச மருத்துவத்துறை அமைச்சர் – எஸ்.பி.நாவின்ன
  11. சுகாதார அமைச்சர் – ராஜித சேனாரத்ன
  12. தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் – ஹரின் பெர்னாண்டோ
  13. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் – சஜித் பிரேமதாச
  14. கல்வி அமைச்சர் – அகில விராஜ் காரியவசம்
  15. துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் – அர்ஜுண ரணதுங்க
  16. பௌத்தசாசன அமைச்சர் – எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
  17. சுற்றுலாத்துறை அமைச்சர் – நவீன் திசாநாயக்க
  18. உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர்- வஜிர அபேவர்த்தன
  19. போக்குவரத்து அமைச்சர் – நிமல் சிறிபால டி சில்வா
  20. கமநல சேவைகள் அமைச்சர் – துமிந்த திசாநாயக்க
  21. உயர்கல்வி அமைச்சர் – சரத் அமுனுக

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பௌசி உள்ளிட்டோருக்கான அமைச்சுப் பொறுப்புகள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று தகவல்கள் தெரிய வருகின்றது.

(riz)