முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும், பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விஷேட அறிவிப்பு ஒன்றின் ஊடாகவே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தனது சகோதரியுமான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் ஊடாகவே மஹிந்த இதனை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர், பொலிஸ் விசாரணைகளில் தான் தலையிடமுடியாது எனவும், முடிந்தால் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை முன்வைக்குமாறும் குறித்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி சம்பந்தமான பல வழக்குகள் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(riz)