பிரதமர் மோடி வீட்டில் தீ விபத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றிரவு 7.25 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறிய அளவில் ஏற்பட்ட அந்த தீ அணைக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீவிபத்தினால் உண்டான சேதம் தொடர்பாக விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.